அமெரிக்க ஓபன்: இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஜோகோவிச் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் காரணமாக காலண்டர்…

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஜோகோவிச் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் காரணமாக காலண்டர் கிராண்ட் ஸ்லானை ஜோகோவிச் வெல்வாரா என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்க ஓபன் கிரான்ட் ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை 4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என்கிற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். இதன் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு அரையிறுதியில் கனடாவின் ஆகர்-அலியாசிமை எதிர் கொண்ட ரஷ்ய வீரர் மெட்வெடேவ் 4-6, 5-7, 2-6 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.