முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் விளையாட்டு

தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனைக்கு தடை

சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

 

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற 61வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஓடி தங்கம் வென்ற தனலட்சுமி, நேரடியாக இங்கிலாந்தின் பிரிமிங்கம்மில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி வந்த சூழலில், தனலட்சுமிக்கு ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த
மாதம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் தனலட்சுமி ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து தனலட்சுமி காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அது குறித்து விசாரணை நடத்தி வந்த சர்வதேச ஊக்கமருந்து
தடுப்பு முகமை, தனலட்சுமியிடம் விசாரணை நடத்திய போது, தனலட்சுமி தனது தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, தனலட்சுமியின் தண்டனை காலம் நான்கு ஆண்டுகளில்
இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கபட்டுள்ளது.

 

பொதுவாகவே ஒரு தடகள போட்டியாளர் ஊக்கமருந்து உட்கொண்டால் அவருக்கு சர்வதேச ஊக்கமருந்து முகமை 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கும். இந்நிலையில் தனலட்சுமி தனது தவறை ஒப்பு கொண்டதால் அவருக்கு தண்டனைக் காலம் 3 ஆண்டுகளாக குறைக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் அதிகாரி வாயிலாக திமுக முறைகேடு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு

G SaravanaKumar

ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை

EZHILARASAN D

இபிஎஸ் மேல்முறையீட்டு மனு; 4 வாரங்களில் பதிலளிக்க ராம்குமார் சுரேனுக்கு உத்தரவு

Arivazhagan Chinnasamy