நடிகை ஊர்மிளாவுக்கு கொரோனா பாதிப்பு

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழில், கமல்ஹாசனுடன் ’இந்தியன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். 1994-ல் வெளியான ’ரங்கீலா’ படம் மூலம்…

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழில், கமல்ஹாசனுடன் ’இந்தியன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். 1994-ல் வெளியான ’ரங்கீலா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் இவர். இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஊர்மிளா, தற்போது இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நடிகை ஊர்மிளாவுக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நடிகை ஊர்மிளா மடோன்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தான் நலமாக இருப் பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீப காலமாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.