தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். அதன்படி, ஜனவரி 28-ஆம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்ரவரி 4-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார்.
அதேபோல, பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைப்பெற்றது, பிப்ரவரி 7-ஆம் தேதி மனுவை வாபஸ் என்றும், வாக்கு எண்ணிக்கை வரும், பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு, 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 36,361 பேரும் மனுதாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் மீதான வேட்புமனுக்கள் பரிசீலனையும் நடைபெற்றது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரைகள் இன்றோடு நிறைவடைகிறது. இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
வரும் 19-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படடுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








