ஜனநாயம் எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை நேருவை பார்த்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற விவாதத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டுள்ளார்
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் லீ சியங் லூங் பேசியதாவது, “ஒவ்வொரு நாடுகளும் தனித்தன்மையான, உயர்ந்த நோக்கத்துடன்தான் துவங்கப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் நாட்டை உருவாக்க பாடுபட்ட, நாட்டையே உருவாக்கிய தலைவர்கள் மறைவுக்குப் பிறகு அந்த நோக்கம் அவரை பின்பற்றுபவர்களால் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு துவக்கமும் தீவிரமான உணர்ச்சியுடன்தான் இருக்கிறது. தங்களது சுதந்திரத்திற்காக விடுதலை வேட்கையுடன், சிறந்த எண்ணங்களுடனும் பாடுபட்டவர்களே நாட்டின் ஆகப்பெரும் தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். அப்படி உருவானவர்தான் ஜவஹர்லால் நேரு என்று பேசினார்.
தொடர்ந்து “இப்போதைய காலகட்டத்தில் அரசியல் மாறிக்கொண்டுள்ளது. இதனால் அரசியல்வாதிகள் மீதான மதிப்பும் குறைந்துள்ளது. இன்றைய நாட்களில் மக்களின் மனநிலை மாறியுள்ளது. அரசியல்வாதிகளிடம் இருக்கும் அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் குறைந்துள்ளது. இதற்கு மேல் அவர்களை பெரிதாக எதிர்ப்பார்க்க வைக்க முடியாது. இதனால் நம்பிக்கைகள் குறைந்து, நாடே சிதைந்துகொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய காலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் அதை முதன்முதலாக அதை உருவாக்கியவர்களின் கருத்தோடு ஒத்துப்போவதில்லை. அதுபோன்றுதான் நேரு உருவாக்கிய இந்தியாவும் இருக்கிறது. மக்களவையில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் மீது இன்னமும் பல குற்றவியல் வழக்குகள் சுமத்தப்பட்டு, அவை தேக்கத்தில் இருக்கிறது. அந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார குற்றங்களாக இருப்பது பத்திரிகை செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. இதனால் பலர் கட்சியை விமர்சிக்கின்றனர். இது போன்ற நிலை நமது நாட்டிற்கும் ஏற்பட கூடாதென்றால் நேர்மையுடனும், தரமாகவும், அனைவருக்கும் சமமான உரிமைகளை பகிர்ந்தளிப்பதிலும் நாம் கவனமாக இருக்கவேண்டும். சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்ற நிலை தொடரவேண்டும். அப்படி செய்தால்தான் இந்தியாவை உருவாக்கிய நேருவை போலவே நம்மாலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்” என்று பேசினார்.








