முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
கேரளா அரசு, தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவில், “முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அபாயத்தை போக்க நிரந்த தீர்வு காண வேண்டும். முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். எனவே, அதனை கருத்தில் கொண்டு கடந்த 2014-ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், மாறிவரும் காலசூழல், பருவநிலை மாற்றத்தால் கடந்த 2018, 2021-ல் அதிகன மழை கேரளாவில் பெய்தது. இதனால், ஏற்பட்ட தாக்கம் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்தது. எனவே, இந்த இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் முல்லை பெரியாறு அணை இல்லை.
ஏற்கனவே இதேபோல, கன மழையால் உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டப்பட்ட ஒரு அணை உடைந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, கேரளவின் நிலைப்பாடு புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதே. அதேபோல, தற்போது அணையின் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும். அணையை கண்காணிக்க முல்லைப்பெரியாறு அணையில் நிரந்தர கண்காணிப்பு குழும் ஏற்படுத்த வேண்டும்” என்பது போன்றவற்றை பதில் மனுவில் கேரளா அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








