தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 5 மணிக்கு நிறைவடைந்தது. முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்களே அதிக அளவில் மனு தாக்கல் செய்துள்ளனர். சனிக்கிழமையான நாளையும் மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கூட்டணி இறுதியாகாததால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதால் வரும் திங்கள்கிழமை முதல் மனுதாக்கல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நிறைவடைகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









