புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்தப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழிசை…

புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்தப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றும், கொரோனா தடுப்பில் புதுச்சேரி மாநிலம் ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளதாகவும் கூறினார்.

அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்து ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரி தவில் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது பெருமை அளிக்கிறது என்றும் தற்போது சிபாரிசுகள் எதுவும் இல்லாமல் தகுதியுள்ளவர்களுக்கு, பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.