தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம் மதியம் 1 மணி நிலவரப்படி 35. 34%ஆக பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப் பதிவினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அரியலூரில் 49.43%, செங்கல்பட்டில் 30.23, சென்னை 23.42% கோயம்பத்தூர் 35.32%, கடலூர், தர்மபுரி 48.08%, திண்டுக்கல் 45.13%, ஈரோடு 36.05%, கள்ளக்குறிச்சி 47.02%, காஞ்சிபுரம் 41.30%, கன்னியாகுமரி 37.21%, கரூர் 50.04%, கிருஷ்ணகிரி 40.11%, மதுரை 31.39%, மயிலாடுதுறை 39.00%, நாகப்பட்டினம் 41.09%, நாமக்கல் 50.58%, பெரம்பலூர் 43.80%, புதுக்கோட்டை 44.26%, ராமநாதபுரம் 39.43% ,ராணிப்பேட்டை 36.01%, சேலம் 43.12%, சிவகங்கை 39.69%, தென்காசி 45.54%, தஞ்சாவூர் 34.45%, தேனி 44.94%, நீலகிரி 36.21%, தூத்துக்குடி 35.55%, திருச்சிராப்பள்ளி 42.00%, திருநெல்வேலி 37.77%, திருப்பத்தூர் 37.56%, திருப்பூர் 33.07%, திருவள்ளூர் 34.52%, திருவண்ணாமலை 41.37%, திருவாரூர் 43.16%, வேலூர் 36.07%, விழுப்புரம்47.52% மற்றும் விருதுநகரில் 44.63% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.







