முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – 933 பேர் தேர்ச்சி; முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தல்!!

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளனர். 

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் இந்த தேர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது. அடுத்த நிலையான நேர்காணல் கடந்த மே 18 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தங்களது முடிவுகளை, upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,011 இடங்களுக்கு நடத்தபட்ட தேர்வில், மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளனர். இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடமும், கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாம் இடமும், ஸ்மிரிதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேக வெடிப்பு வெளிநாட்டு சதியாக இருக்கலாம்-முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

Web Editor

பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவு – அமைச்சர் அன்பில் மகேஸ்

EZHILARASAN D

20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

Halley Karthik