அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC (M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும். அதன்படி,

குரூப்-1: ​பொதுப் பிரிவினருக்கு 32-ல் இருந்து 37-ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 வயதிலிருந்து 42 வயதாகவும், மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கு 42 வயதிலிருந்து 47-ஆகவும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47-ல் இருந்து 52-ஆகவும் உயர்ந்த்தப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவினருக்கு 30-ல் இருந்து 35-ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குஉச்ச வயது வரம்பில்லை, மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கு 40 வயதிலிருந்து 40-ஆகவும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில்லை.


குரூப்-IV (Having higher qualification): ஒதுக்கீட்டுப் பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் – தற்போதைய வயது வரம்பு: உச்ச வயது வரம்பில்லை

​குரூப்-IV (Not having higher qualification – BC, BC(M), MBC & DNC): பொதுப் பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 35 வயதாகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32 வயதிலிருந்து 37 வயதாகவும், மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 வயதாகவும். மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயதிலிருந்து 47 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப்-IV (Not having higher qualification – SC, ST and Dest. Widow):
​பொதுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 40 வயதாகவும். மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

​இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு மூலம், வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.