நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம்-ன் இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.  தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம்…

காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம்-ன் இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் புதிய படத்தில் நடிக்க உள்ளார். 

தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சசிகுமார் நடித்து வெளியான ’அயோத்தி’ திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.

தொடர்ந்து சசிகுமார் காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் 11வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழு பதிவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.