பகத்சிங் நாடக ஒத்திகையின்போது தூக்குபோடும் காட்சியில் நடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புதான் அருகில் உள்ள பாபத் கிராமத்தை சேர்ந்தவர் சிவம். ஒன்ப தாம் வகுப்பு மாணவனான சிவம் மற்றும் அவன் நண்பர்கள் இணைந்து சுதந்திர தினத்துக்கு நாடகம் நடத்த முடிவு செய்தனர்.
பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோரை மையப்படுத்திய நாடகத்தில் சிவம், பகத்சிங்காக நடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில், அதற்கான ஒத்திகையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
தூக்குப் போடும் காட்சியின்போது சிவம் ஒரு ஸ்டூலில் ஏற்றப்பட்டார். பின் கழுத்தில் தூக்குக் கயிறு கட்டப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டூல் நழுவியதில் கயிறு கழுத்தை இறுக்கியது. பின்னர் மூச்சுத்திணறி சிவம் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.







