மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்

சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் புகார்…

சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் புகார் தெரிவித்திருந்தார். அதனால், தேர்தல் களத்தில் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்தார்.

எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள், தம்மிடம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பின்னர் அவர் சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதேபோன்று, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திரைப்பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்றினர்.

சென்னை நீலாங்கரை 192-வது வார்டில் வசிக்கும் நடிகர் விஜய், சிவப்பு நிற காரில் வந்து, ரசிகர்கள் புடைசூழ வாக்களிக்க வந்தார். நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி வாக்குச்சாவடியில் அவர் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது நடிகர் விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், குஷ்பு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பாஜக தனித்து போட்டியிடுவதில் தவறில்லை எனவும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து தற்போது பேச முடியாது எனவும் கூறினார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் திரைப்பட இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பாரதிராஜா ஆகியோர் வாக்களித்தனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ஊழலில் எது பெரிய கட்சி என்பதில்தான் தற்போது போட்டி நிலவுகிறது எனவும் எந்த கட்சிக்கும் எங்கும் அலை வீசவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேபோல். இயக்குநர்கள் ஹரி, சுந்தர்ராஜன், நடிகர்கள் அருண்விஜய், மன்சூர் அலிகான், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர்.

சென்னை நீலாங்கரை 192-வது வார்டில் வசிக்கும் நடிகர் விஜய், சிவப்பு நிற காரில் வந்து, ரசிகர்கள் புடைசூழ வாக்களிக்க வந்தார். நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி வாக்குச்சாவடியில் அவர் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது நடிகர் விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.