கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே, நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே, சென்னை கும்பகோணம் தேசிய
நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த கார், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெய்வேலி நகர காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது, கார் மோதி விபத்து ஏற்படுத்திய நிகழ்வு, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







