தமிழ் நாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…….!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார். அவரை தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ் நாடு வந்துள்ள அவர் ஹெலிகாப்டா் மூலம் புதுக்கோட்டைக்குச் சென்று திருச்சி சாலையில் உள்ள பாலன் நகா் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

பிறகு சாலை வழியாக திருச்சிக்கு வரும் அமித்ஷா ,அங்குள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். தொடர்ந்து திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் அவர் சுவாமி தரிசனம் செய்கிறாா்.

பின்னா், மன்னாா்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழா’வில் பங்கேற்கிறாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.