மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு எந்த உத்தரவாதமும் தரவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த பின்பு தமிழ்நாட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேகதாது விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தோம். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக வாதங்களை வைத்தோம். கர்நாடக அரசுக்கு மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு துணை போக கூடாது என தெரிவித்தோம்.
எந்த காரணத்திலும் கர்நாடகா அணை கட்ட முடியாது, ஏனெனில் டி.பி.ஆர். அறிக்கையில் சுட்டிக்காட்டிய விவகாரங்களை நிவர்த்தி செய்யவில்லை என தெரிவித்தார்.
கீழ் பாசன மாநிலங்களிடம் அனுமதி இல்லை, காவிரி நீர் மேலாண்மை வாரிய ஒப்புதலும் தேவை, அவையும் கொடுக்கப்படவில்லை என்பதால் தற்போதைய டி.பி.ஆர் அறிக்கைக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டோம். தற்போது எந்த காரணத்துக்காகவும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. அங்கு அணை கட்ட மத்திய அரசு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.