முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 3.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. 

கொரோனாவை போரில் முக்கிய பணியாக தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. எனினும், மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி அளவு குறைவாக இருப்பதாகவும், கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

தமிழ்நாட்டுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைவாக வழங்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. நேற்று 2.50  லட்சமும், இன்று ஒரு லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Advertisement:
SHARE

Related posts

கைகள் இல்லை, எனினும் நடனத்தால் உலகை ஈர்த்த சிறுமி!

Jayapriya

என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் முதலாவது ’தகைசால் தமிழர்’ விருது

Gayathri Venkatesan

ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்து என்னை ஏன் விலக்கினார்கள்: டாப்ஸி பன்னு கேள்வி

Vandhana