பிரிவினைவாத போக்கை பரப்ப நினைத்து உள்நோக்கத்துடன் ‘ஒன்றியம்’ என்கிற சொல்லை திமுக பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிப்பதாக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது தமிழக பாஜக.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தனது தனது முதல் செயற்குழு கூட்டத்தை தமிழக பாஜக கூட்டியது. மாநில செயலாளர் கருநாகரான் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ளது. இதில், ‘ஒன்றியம்’ என்கிற சொல்லை திமுக பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காகவும் தீர்மானத்தை பாஜக நிறைவேற்றியுள்ளது. மேலும்,
கொரோனா நோய்த்தொற்றை திறம்பட கையாண்ட மத்திய அரசுக்கு பாராட்டு.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பணி சிறக்கவும், அதேபோல அதற்காக பணியாற்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
ஒன்றிய அரசு என்ற – பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
மாணவர்களுக்கு அதிக பயன் அளிக்கக்கூடிய நீட் தேர்வில் மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகளுக்கு கண்டம்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மாநில அரசுக்கு கண்டனம்.
கோவில் நில ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் இந்து பள்ளிகளை அவமானப்படுத்துவதற்கும் கண்டனம்,
உள்ளிட்ட தீர்மானங்களை பாஜக நிறைவேற்றியுள்ளது.







