முக்கியச் செய்திகள் தமிழகம்

போதை மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை

சென்னையில், போதை மருந்து கொடுத்து, மிரட்டி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர், பகுதி நேர பேராசிரியர், திரைப்பட நடிகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

 

ராமாபுரத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். சிறுமி வீட்டருகே உள்ள கடைக்கு சென்று தினமும் பானிபூரி சாப்பிட்டு சென்று வரும் போது, தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் வசந்தகிரிஷ், என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இந்த நிலையில் மருத்துவ மாணவன் சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியை வாங்கி, அவருடன் தினமும் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனை தனக்கு சாதமாக மாற்றி கொண்ட வசந்தகிரிஷ் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமியை அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி தனது பாலியல் இச்சைக்கு இணங்க வைத்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மேலும் சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதை வசந்தகிரிஷ் அவரது நண்பர்களான சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வசந்தகிரிஷின் நண்பர்கள் சிறுமியிடம் உனக்கும், வசந்துக்கும் இடையே நடந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க தங்களுடன் பாலியல் இச்சைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். 4 பேரும் அவருக்கு ஹூக்கா எனும் போதை பொருளை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என அவரது பாட்டி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் , அந்த 4 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்

G SaravanaKumar

இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!

Niruban Chakkaaravarthi

இந்தக் கதையின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்-நடிகர் அருண் விஜய்

Web Editor