முக்கியச் செய்திகள் இந்தியா

தெலுங்கானாவின் ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் பாலம்பேட்டில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ராமப்பா கோயில் உள்ளது. காகத்திய வம்ச மன்னர்களால், 13 ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சிற்ப வேலைப்பாடுகளுக்காக சிறப்புப் பெற்றது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் மூலவா் ராமலிங்கேஸ்வரர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோயிலை வடிவமைத்த கட்டடக் கலைஞர் ராமப்பாவின் பெயரால் இந்தக் கோயில் அறியப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பெறுவதற்காக மத்திய அரசு இந்தக்கோயிலை பரிந்துரைத் திருந்தது.

இந்நிலையில் இப்போது உலக பாரம்பரிய சின்னமாக இந்தக் கோயிலை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி ட்விட்டரில், ’ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. பிரதமா் மோடியின் வழிகாட்டுதல், ஆதரவுக்காக அவருக்கு தெலங்கானா மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள் ளார்.

இதுபற்றி பிரதமர் மோடி, ‘’தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். காகதிய வம்சத்தின் சிறப்பான கைவினைத் திறனை ராமப்பா கோயில் வெளிப்படுத்துகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தைப் பார்வையிட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து மமதா பானர்ஜி தர்ணா!

Halley Karthik

விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிதியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

G SaravanaKumar

கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ.

G SaravanaKumar