தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 439வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி…

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 439வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று காலை 7 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கொடியேற்றத்திற்கு பிறகு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஒருவழிப் பாதையில் கோயிலுக்குள் வரிசையாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருவிழா முடியும் வரை இதே நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், பேராலயத்திற்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை, ஆசீர் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும் அந்நேரங்களில் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பக்தர்கள் தனித்தனியே ஆலயத்துக்கு வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தி செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் தேர் பவனி, சொரூப பவனிக்கு இந்தாண்டும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆராதனைகள் மற்றும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 400 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.