முக்கியச் செய்திகள் தமிழகம்

கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான கறுப்பு, சிவப்பு இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை, தொழில் முறை, இன மரபியல், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறியும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 8 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 11ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த அகழாய்வில் இதுவரை சுடுமண் உருவம், யானை தந்தத்தில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உருளை வடிவ மணி, தந்தத்தினாலான பகடை காய், காதணி, சுடுமண்ணாலான தக்களிகள், காதணிகள், ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், சங்கினாலான வளையல்கள், வட்டசில்லுகள் போன்ற 1500 க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாளிக்குள் கருப்பு சிவப்பு நிற குவளைகளுடன் 40 செமீ நீளம் கொண்ட இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாள் எது போன்ற பயன்பாட்டை கொண்டது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி

Web Editor

அதிமுக பொதுக்குழு வழக்கு; இன்று தீர்ப்பு

G SaravanaKumar

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

Jayapriya