கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த பாலத்தின் ஒரு பகுதி!

டெல்லி அருகே மேம்பால கட்டுமான பணியின்போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் குருகிராம்-துவாரகா விரைவு சாலையில் உயர்மட்ட மேம்பாலப் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை…

டெல்லி அருகே மேம்பால கட்டுமான பணியின்போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் குருகிராம்-துவாரகா விரைவு சாலையில் உயர்மட்ட மேம்பாலப் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை தவுலதாபாத் பகுதியில் மேம்பாலத்தில் இரு தூண்களுக்கிடையே கான்கிரீட் பாலத்தை பொருத்தும்போது பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து எவ்வித தகவல்கள்களும் தெரிவிக்கப்படவில்லை. கடும் பணியிலும், மோசமான காலச்சூழலிலும் பாலத்தை கட்டியெழுப்பி வரும் தொழிலாளர்களுக்கு இந்த விபத்து தற்காலிக பிண்ணடைவாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.