முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் பாஸ்போர்ட் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வீரபுத்திரன் என்பவர் சட்டவிரோதமாக பணம் பெற்றுக் கொண்டு பாஸ்போர்ட் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து சிபிஐ இந்த புகார் தொடர்பாக ரகசியமாக நடத்திய விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த நபர்களுக்கு இந்தியர்கள் என சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்க மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூத்த கண்காணிப்பாளர் வீரபத்திரன், டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் ரமேஷ் என்பவரின் துணையுடன் 45 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூத்த கண்காணிப்பாளர் வீரபுத்திரன் மற்றும் முகவர் ரமேஷ் மற்றும் பாஸ்போர்ட் வாங்கியவர் என மூன்று பேர் மீது மதுரை சிபிஐ மூன்று பிரின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரியே பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்படும்” : சென்னை மாநகராட்சி ஆணையர்

Halley Karthik

செஸ் ஒலிம்பியாட் 2ம் சுற்றுப் போட்டி – இன்று களம் இறங்குகிறார் பிரக்ஞானந்தா

Web Editor

தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

EZHILARASAN D