தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை போக்குவரத்து சோதனை சாவடியில் ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரேமா ஞானகுமாரியை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரேமா ஞானகுமாரி என்பவர் நேற்று பணி முடிந்து வீடு சென்று கொண்டிருக்கும்போது, அவரது காரை இடைமறித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது காரில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் 2.76 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து அது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சோதனையின் போது, பல்வேறு சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், புளியரை போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரேமா ஞானகுமாரியை பணியிடை நீக்கம் செய்து மாநில போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.







