அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

அஇஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அஇஅதிமுக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற…

அஇஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அஇஅதிமுக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஇஅதிமுக, திமுக தங்களது கூட்டணியை உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில் தனது கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படுவதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாகவும் அஇஅதிமுக தெரிவித்துள்ளது. தொடர் இழுப்பறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கிடையே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஇஅதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முதன்மையான கட்சிகளுடன் கையெழுத்தான நிலையில், தேமுதிகவுடனான தொகுதி பங்கீட்டில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. அதே போல திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சியினுடனான தொகுதி பங்கீட்டிலும் இழுபறி நீ்டித்து வருகிறது.

முன்னதாக அஇஅதிமுக தனது முதல்கட்ட வேட்பாளர்களை அறிவிருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.