துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர்: இன்று தாயகம் திரும்புவார் என எதிர்பார்ப்பு

உக்ரைனில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர் இன்றைக்குள் தாயகம் திரும்புவார் என எதிர்பாரக்கப்படுகிறது. உக்ரைன் மீது 12வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் சிக்கி தவிக்கும்…

உக்ரைனில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர் இன்றைக்குள் தாயகம் திரும்புவார் என எதிர்பாரக்கப்படுகிறது.

உக்ரைன் மீது 12வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே உக்ரைனின் அண்டை நாடுகளில் தஞ்சைமடைந்துள்ள இந்திய மாணவர்களில் இதுவரை 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டுனர். இந்நிலையில், கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின்போது குண்டடிப்பட்டு காயமடைந்த பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்ஜியோத் சிங், சி-17 ரக விமான மூலம் இன்றைக்குள் தாயகம் அழைத்துவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைச் செய்தி: கடும் ‌சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹர்ஜியோத் சிங் போலந்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து தாயகம் புறப்படவுள்ள சிறப்பு விமானத்தில் மற்ற மாணவர்களுடன் ஹர்ஜியோத் சிங் அழைத்துவரப்படுவார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.