இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று கடும் சரிவுடன் இந்திய பங்குச்சந்தைகள் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 445 புள்ளிகள் சரிந்து…

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.

வாரத்தின் முதல் நாளான இன்று கடும் சரிவுடன் இந்திய பங்குச்சந்தைகள் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 445 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 888 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 393 புள்ளிகள் குறைந்து 15 ஆயிரத்து 852 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா 12-வது நாளாக போர் தொடுத்திருக்கும் சூழலில் தொடர்ந்து 2-வது வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம்

இதேபோன்று, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 85 ரூபாய் அதிகரித்து 5,055 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து 40,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 80 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 20 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளி ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 75,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.