ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய படையினர் தீவிரவாதிகளாக மாறி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா, தங்கள் நாட்டின் மற்றுமொரு மேயரை கடத்தி இருப்பதாகக் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: மணமக்களுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்
ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்த உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, உக்ரைனின் விவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், மைகோலயிவ் நகரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.