சாத்தூர் அருகே திருமண விழாவில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மணமக்களுக்கு சீர்வரிசையாக எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்ட நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள எதிர்க்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் – முத்துலட்சுமி தம்பதியின் மகன் நவநீதன் என்பர் ஆட்டோமொபைல் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம் இனாம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் – விஜயலட்சுமி தம்பதியின் மகள் அனிதாவிற்கும் எதிர்க்கோட்டை கிராமத்தில் உள்ள கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்துக்கு பரிசளிக்க விரும்பிய மணமக்களின் நண்பர்கள், புத்தகங்களை பரிசளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, 500-க்கு மேற்பட்ட புத்தகங்களை மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். இந்த புத்தகங்களை தாம்பூல தட்டில் வைத்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று மணமக்களுக்கு வழங்கினர்.
அண்மைச் செய்தி: “ரஷ்யாவில் கடும் விலைவாசி உயர்வு”
மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து புத்தகங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று மணமக்களுக்கு பரிசளித்தனர். திருமணத்தின் போது மற்ற பரிசுகள் வழங்குவதை தவிர்த்து, 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







