முக்கியச் செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த நம்பர் ஒன் ’சுழல்’

நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளரான தப்ரைஸ் ஷம்சி, ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், அடுத்த மாதம் 19 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட சில அணிகள் ஏற்கனவே துபாய் சென்றுவிட்டன. அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த அணிக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச டி-20 போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில், தற்போது முதலிடத்தில் இருக்கும் ஷம்சி, 39 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதற்கிடையே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

Gayathri Venkatesan

கொரோனாவால் உயிரிழந்தவர் உயிருடன் வந்தாரா? ஆந்திராவில் பரபரப்பு!

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் பயங்கர மோதல்: 700 தலிபான்கள் பலி, 600 பேர் கைது

Ezhilarasan