கொரோனாவுக்கு மாத்திரை: பிரிட்டன் அனுமதி

கொரோனா தொற்றுக்கு மாத்திரியை பயன்படுத்த பிரிட்டன் அனுமதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தற்போது வரை இந்த தொற்று காரணமாக 50,40,413 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த உலக…

கொரோனா தொற்றுக்கு மாத்திரியை பயன்படுத்த பிரிட்டன் அனுமதித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தற்போது வரை இந்த தொற்று காரணமாக 50,40,413 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. அதன் விளைவாக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மாத்திரையும் கொரோனா தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.

மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா மாத்திரையை பயன்படுத்த பிரிட்டன் அனுமதித்துள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்றுக்கு மாத்திரையை பயன்படுத்த அனுமதித்த முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளது.

பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (MHRA) மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்தின் ‘மால்னுபிரவீர்’ எனும் மாத்திரையை கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. தொற்று பாதித்தவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்கள் முதல் ஐந்து நாட்களிலும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த மாத்திரையை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.