நாடு முழுவதுவம் இன்று தீபாவளி கொண்டாடப்படக்கூடிய நிலையில், இந்தியா-பாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
பஞ்சாபின் வாகா எல்லையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கினார். இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைப் பகுதியிலும் இரு நாட்டு வீரர்கள் இனிப்புகளை பறிமாற்றிக்கொண்டு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
வங்கதேச எல்லையில், அந்நாடு எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் ஜெனரல் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.
முன்னதாக இன்று காலை ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.








