ஏற்றத்தில் தீபாவளி சிறப்பு பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தைகளில் இன்று விடுமுறை. ஆனாலும் தீபாவளியையொட்டி முர்ரத் என வர்த்தகம் மாலை ஒருமணி நேரம் மட்டும் நடைபெறும். இந்த வர்த்தகம்‌ ஏற்றத்துடன் நடைபெற்றது. இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப்பண்டியையொட்டி…

மும்பை பங்குச் சந்தைகளில் இன்று விடுமுறை. ஆனாலும் தீபாவளியையொட்டி முர்ரத் என வர்த்தகம் மாலை ஒருமணி நேரம் மட்டும் நடைபெறும். இந்த வர்த்தகம்‌ ஏற்றத்துடன் நடைபெற்றது.

இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப்பண்டியையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல மும்பை வர்த்தக நிலையத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்து சமயத்தின் காலண்டரான சம்வத்தில் இன்று ஆண்டின் தொடக்கமாக குறிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கொண்டாடும் விதமாக ஒரு மணி நேரம் மட்டும் வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாலை தொடங்கிய வர்த்தகத்தில் சென்சக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 60,208 எனும் உச்சத்தை தொட்டது. அதே போல நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17,900 எனும் உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் ஆதாயமடைந்துள்ளன.

மாலை 6.30 நிலவரப்படி சென்சக்ஸ் 347 புள்ளிகள் அதிகரித்து 60,119 எனவும், நிஃப்டி 102 புள்ளிகள் அதிகரித்து 17,932 எனும் உச்சத்தை தொட்டது.

இறுதி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 295 புள்ளிகள் அதிகரித்து 60,067 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 87 புள்ளிகள் அதிகரித்து 17,916 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றது.

முன்னதாக வர்த்தகத்தை பாலிவுட் நடிகை பாக்கியஸ்ரீ மற்றும் மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் ஆகியோர் தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.