INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

இந்தியா அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்தியா-அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி பெல்பாஸ்ட் சிவில்சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக செயல் பட உள்ளார்.


இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

இந்திய அணியில், சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அணியில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.