முக்கியச் செய்திகள் சினிமா

படப்பிடிப்பு தளத்தில் உதவித்தொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவித்தொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின். 

இன்று (13.09.2022) உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாகச் சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டிடம் “நமக்கு நாமே” திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக ரூ.13,60,000 (ரூபாய் பதிமூன்று லட்சத்து அறுபதாயிரம்) “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.உடன் கூடுதல் ஆட்சியர் பாலசந்தர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், Red Giant Movies இணை தயாரிப்பாளர் M.செண்பக மூர்த்தி, மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில், மாமன்னன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஈஸ்வர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் P.K.பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நடராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஜருகுமலை மலைப் பாதையில் வளைவில் எதிர்வரும் வாகனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் (குவியாடி) Convex Mirror 10 அமைத்துக் கொடுக்கப்படுகிறது. ஜருகுமலையில் வசிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மளிகைக் கடை வைக்க மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 55 நபர்களுக்கு உதவித் தொகை “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ட்ரெண்டாகும் ரயில் பெண் – திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் இமான்

Web Editor

அரையிறுதியில் ஜோகோவிச்-மேலும் டாப் 10 விளையாட்டுச் செய்திகள்

Web Editor

எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை; அண்ணாமலை

G SaravanaKumar