முக்கியச் செய்திகள் சினிமா

வெங்கட் பிரபு – விஜய் இணையும் புதிய பட அப்டேட்!

“விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளது, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறோம், கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சயம் அவர் நடிப்பார்.

தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்படி இருக்க விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் பிரபல ஆஹா ஓடிடி தளத்தில் சர்கார் என்ற கேம் ஷோ ஒன்றை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.இதற்கான ப்ரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜீவா. அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் நடிகர் ஜீவா.

அப்போது, பிரபல தயாரிப்பு நிறுவனமான குட் பிலிம்ஸின் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் கூறிய ஜீவா “விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளது, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறோம், கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சயம் அவர் நடிப்பார். மேலும் வாய்ப்புக்கிடையில் அப்படத்தில் நானும் நடிப்பேன் என்று கூறினார்.

இந்நிலையில் விஜயின் புதிய படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.   உள்ளதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் விஜய் நடித்த படங்களிலே இப்படம் மிகவும் தனித்துவமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அவருக்குக் கதையில் மிகவும் வலுவான கதாபாத்திரமாகவும் நடிப்பை மையப்படுத்திய கதாபாத்திரமாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதலமைச்சர் 

EZHILARASAN D

எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது: திமுக அறிக்கையில் இடம்பெற்ற திருத்தங்கள்!

Gayathri Venkatesan

பிரமாண்டமாக வெளியான “ஹவுஸ் ஆப் ட்ராகன்” சீரிஸின் முதல் எபிசோட்

EZHILARASAN D