பிலிப்பைன்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு பாரம்பரிய பிலிப்பைன்ஸ் நடன நிகழ்ச்சியுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-ஆசியான் உச்சிமாநாடு மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸ் ஏற்கும் வகையில் நாளை நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக பிலிப்பைன்ஸின் மணிலா வந்தடைந்தார்.

மணிலா விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய பிலிப்பைன்ஸ் நடன நிகழ்ச்சியுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது . இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வம்சாவழியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா-ஆசியான் உறவுகள், இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான நமது தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கியத் தூணாகும். இந்தியாவும் ஆசியானும் 2026-ஆம் ஆண்டை ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாகக் கொண்டாடும் வேளையிலும், 2027-ஆம் ஆண்டில் நமது உரையாடல் உறவுகளின் 35 ஆண்டுகளையும், நமது விரிவான உத்திசார் கூட்டாண்மையின் ஐந்தாண்டுகளையும் நினைவுகூரும் வகையிலும் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடானது, 2026-2030 ஆசியான்-இந்தியா செயல் திட்டம் உள்ளிட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மையின் செயலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதுடன், ஒத்துழைப்பின் எதிர்கால திசையையும் வகுக்கும்.

கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, ஆசியான் மற்றும் பிற பங்கேற்பு நாடுகளுடன் பிராந்திய மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.