தஞ்சை மத்திய மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில், தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள ஆதரவற்ற சிறுமியர் இல்லத்தில் வசிக்கும் சிறுமியர்களுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்ந்தோம் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த குறிப்பிட்ட பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி, அவர் மேற்கொள்ளும், பிரச்சாரம், மேடைப் பேச்சு, நலத்திட்ட உதவி எனப் பலவற்றையும் உடனுக்குடன் பகிர்ந்து வருகிறார். சில நேரங்களில் அவரின் பேச்சும் செயல்பாடும் கடும் விமர்சனத்தையும், பெரும் ஆதரவையும் பெறும். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று பகிர்ந்த பதிவு ஒன்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தஞ்சை மத்திய மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள ஆதரவற்ற சிறுமியர் இல்லத்தில் வசிக்கும் சிறுமியர்களுக்கு மதிய உணவு வழங்கி, அவர்களோடு சில மணிநேரம் இருந்துவிட்டுச் சென்றனர். இந்தச் செய்தியை, அவரே தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறந்த முன்னெடுப்பாக குழந்தைகளின் முகத்தை மறைத்து புகைப்படங்களை பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏhttps://t.co/WciCN2AH8n | @Udhaystalin | @arivalayam | #News7tamilupdates pic.twitter.com/AaFWsJio0n
— News7 Tamil (@news7tamil) June 27, 2022
வழக்கமாகத் தலைவர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை அப்படியே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடுவார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் குழந்தைகளின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது ஒரு நல்ல முன்னெடுப்பு எனப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், முகத்தை மறைத்து புகைப்படம் வெளியிட்டதற்குப் பதிலாகப் படத்தையோ தாங்கள் செய்த உதவியையோ வெளியில் சொல்லாமல் இருந்து இருக்கலாமே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘’மை டியர் பூதம்’ இயக்குநர் என் ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்’
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது, நிச்சயமாக இது ஒரு நல்ல முன்னெடுப்பு, 18 வயத்துக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் படங்களை வெளியிடுவதைத் தவிக்க வேண்டும் என சட்டமே உள்ளது. ஆனால், நல்ல விஷயங்களுக்குப் பகிர்வதில் தவறு இல்லை. உதவி செய்ததை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்வது என்பது இந்த உதவியைப் பார்த்து மற்றவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு உதவ முன்வரமாட்டார்களா என்ற நோக்கில்தான். அப்படிச் செய்யும் உதவிகளை இப்படியாகப் பகிர்வது உண்மையில் நல்ல முன்னெடுப்புதான் என அவர் தெரிவித்தார்.








