மை டியர் பூதம் இயக்குநரை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் என் ராகவனை தொலைப்பேசியில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இயக்குநர் என் ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா…

பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் என் ராகவனை தொலைப்பேசியில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இயக்குநர் என் ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டுத் தேதி ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது. சமீபத்தில் திரைப்படத்தைச் சிறப்புக் காட்சி ஒன்றில் பார்த்த முன்னணி நடிகரும் – தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் ராகவனை தொலைப்பேசியில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘மீண்டும் கேப்டன் ஆகிறாரா கிங் கோலி?’

அப்போது, ‘மை டியர் பூதம்’ படத்தைத் தான் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததாகவும், திரைப்படத்தோடு உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடிந்ததாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று உதயநிதி ஸ்டாலின், என் ராகவனிடம் தெரிவித்துள்ளார். படத்தைப் பாராட்டிய உதயநிதிக்கு இயக்குநர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனலும், ஓடிடி உரிமையை ஜீ5 தளமும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போல் இது அமைந்துள்ளது என்று குழுவினர் தெரிவிக்கிறனர். இந்த படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன், அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இம்மான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.