திமுக சார்பில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி 147 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
இந்த நிலையில், சென்னையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உதயநிதி 92425 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலி 23643 வாக்குகளும் பெற்றனர்