முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மகனின் மேற்படிப்புக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற உதயநிதி ஸ்டாலின்

மகன் இன்பநிதியின் மேற்படிப்புக்காக குடும்பத்துடன் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று துபாய் சென்றார்.

கருணாநிதி கிரிக்கெட்டின் மீது ஆர்வமுடையவர். அவர் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் போட்டிகளைத்தான் ஆர்வத்துடன் பார்ப்பார். குறிப்பாக, சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் கருணாநிதி. ஆனால், கருணாநிதியின் கொள்ளுப்பேரன் இன்பநிதி கால்பந்து விளையாட்டில் கால்பதித்து வருவது பலராலும் ஈர்க்கப்பட்டது. சினிமா, அரசியல் என்று ஆயிரம் பிஸி இருந்தாலும், அடிக்கடி தன்னுடைய மகனின் போட்டோக்களை ட்விட்டரில் ஷேர் செய்து வருவார் உதயநிதி ஸ்டாலின்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒவ்வொரு முறையும் உதயநிதி, தன்னுடைய மகனின் போட்டோவை பதிவிடும்போது, ரசிகர்களும் திமுகவினரும் திரண்டு வந்து பாராட்டு தெரிவிப்பார்கள். மகனை விட அப்பா இளமையாக இருக்கிறாரே என்று கமெண்ட்டுகளை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில், இன்பநிதி தன்னுடைய கையின் பலத்தை காட்ட, அதனை உதயநிதி பூரித்து பார்க்கும் போட்டோ இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி தற்போது மேற்படிப்புக்காக வெளிநாடு செல்கிறார். இதற்காக தனது மகனுடன் உதயநிதி ஸ்டாலின் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். மேற்படிப்புக்காக சென்ற பேரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் வழியனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நானே வருவேன் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

Web Editor

ஜி.எஸ்.டி – மத்திய நிதியமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்

Arivazhagan Chinnasamy

நேஷனல் ஹெரால்டு வழக்கு; அவகாசம் கோரும் சோனியா காந்தி

G SaravanaKumar