உதயநிதி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று ரிலீசானது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் இன்று வெனியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
“புதுக்கோட்டையில் மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் ரகுபதி, திமுக நிர்வாகிகளுடன் கண்டு ரசித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
மாமன்னன் படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. மாமன்னன் திரைப்படம் தடைகளை தாண்டி மிகப்பெரிய வெற்றி பெறும். உதயநிதி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அமைச்சராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடிக்க கூடாது என்பது சட்டம்கிடையாது” என அமைச்சர் ரகுபதி கூறினார்.






