11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் – போக்சோ சட்டத்தில் கைது!

மயிலாடுதுறையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  சிறையில் அடைத்தனர். மயிலாடுதுறை அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை…

மயிலாடுதுறையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்த பஷிர்அகமது(63). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அக்கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த 6ம் வகுப்பு பயிலும் 11வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து கடையின் உள்ளே அழைத்து ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் மளிகை கடையில் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பஷீர் அகமது வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.