முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் வாகனம்

உடல்நலக் குறைவால் போராடிய சிறுவனுக்குப் பரிசளித்து மகிழ்வித்த அபுதாபி காவல்துறையினர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) காவல்துறையினர் நான்கு வயது சிறுவனுக்குப் பரிசுகளைக் கொடுத்து ஆச்சரியப்படுத்திய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நான்கு வயது சிறுவனான முகமது அல் ஹர்மோதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் போராடி வருகின்றார். இவரை மகிழ்ச்சியூட்ட அபுதாபி காவல்துறையினர் அவருக்கு மிகவும் விருப்பமான பொம்மை மின்சார காரை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒரு புதிய பொம்மை மின்சார காரைக் கொடுப்பதற்கு முன்பு, அச்சிறுவனை காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் “மகிழ்ச்சி ரோந்துக்கு” அழைத்துச் சென்றதாக “தி கலீஜ் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மின்சார காருடன், முகம்மதுவுக்கு ஒரு குட்டி அன்பளிப்பு பையும் காவல்துறையினரால் வழங்கப்பட்டது. இச்சம்பவத்தின் வீடியோ காட்சியை அபுதாபி காவல்துறையினர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதையடுத்து இந்த வீடியோ காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனையடுத்து வீடியோ காட்சியில், சிறுவன் வண்ணமயமான பலூன்களுடன் வரவேற்கப்படுகிறான். பின்னர் அவர் ஒரு சவாரிக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். பின்பு சவாரி முடிந்து வந்த முகம்மதுவுக்கு மின்சார பொம்மை காரை அதிகாரிகள் பரிசாக வழங்கினார்கள். இதனையடுத்து அதில் உட்கார்ந்து கொள்ளும் முகமது பெரும் மகிழ்ச்சியுடன் அதில் ஒரு சவாரிக்குச் செல்லத் தயாராக உள்ளார். இத்துடன் அவர் ஒரு பொம்மை துப்பாக்கியையும் கையில் வைத்திருக்கிறார். அந்த நான்கு வயது சிறுவன் மகிழ்ச்சியுடன் கேமராவுக்கு “தம்ப்ஸ் அப்” குறியைக் காண்பிப்பதன் மூலம் வீடியோ முடிவு பெறுகிறது.

Advertisement:

Related posts

தமிழக வரலாற்றில் இடம் பிடித்த முதல் பெண் உளவுத்துறை டிஐஜி ஆசியம்மாள்!

Karthick

நன்னிலம் தொகுதி எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்: அமைச்சர் காமராஜ்!

Karthick

அதிரடி காட்டும் ஆளுநர் தமிழிசை!

Niruban Chakkaaravarthi