முக்கியச் செய்திகள் விளையாட்டு

இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஹிட்மேன் ரோகித்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 61 ரன்கள் சேர்த்தால் புதிய சாதனை ஒன்றை ரோகித் சர்மா படைக்க வாய்ப்புள்ளது.

இபிஎல் போட்டியின் 5வது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 9ம் தேதி தொடங்கிய முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரு அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து கடந்த 11ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மும்பை அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் அந்த அணி வீரர்கள் மார்கோ ஜான்சன், சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொருத்த வரை டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களில் நிதீஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதி அரைசதம் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். இயான் மார்கன் பந்து வீச்சில் அசத்தினார்.

மும்பை அணியில் இடம்பெற்றிருந்த குயின்டன் டி கோக் தனது 7 நாள் தனிப்படுத்தலுக்கு பின்னர் இன்று அணியில் இணைய உள்ளார். இது மும்பை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா இதுவரை கொல்கத்தா அணிக்கு எதிராக 939 ரன்கள் எடுத்துள்ளார். அதனால், இன்றைய போட்டியிலும் ரோகித்தின் அதிரடி தொடரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இந்த போட்டியில் 61 ரன்கள் சேர்த்து விட்டால் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இரு அணிகளுக்கும் இடையே கடந்த 4 வருடங்களில் முழுவதுமாக நடந்து முடிந்த 27 ஆட்டங்களில் 21 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த 10 ஆட்டங்களில் 9ல் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

G SaravanaKumar

காளி பட வழக்குகளால் பாட்டியின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை – லீனா மணிமேகலை

EZHILARASAN D

பல்லுயிர் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி – இயற்கை ஆர்வலர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சி

Jayakarthi