புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பேருந்தி நிலையத்தை திறந்து வைப்பதற்காகவும், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றடைந்தார். முதலமைச்சர் விஜய் வருகையை ஒட்டி புதுக்கேட்டை முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்ற முதலமைச்சருக்கு வழையெங்கும் சாலைகளின் இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து புதுக்கோட்டை வந்தடைந்த முதலமைச்சர் விஜய் சுமார் 4 கிலோ மீட்டர் வரை ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது வாகனத்தின் மீது நின்று பொதுமக்களை பார்த்து கையசைத்த வாறு சென்றார்.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




