நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு 3-வது டோஸ்: அமெரிக்கா அனுமதி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா முதல் அலையின்போது அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு…

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா முதல் அலையின்போது அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறியது. கொரோனா தொற்றால் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாவது அலையின் போது ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் தொற்றுப் பாதிப்பு குறைந்தது.

இப்போது மூன்றாவது அலை பரவி வருகிறது. இதில் டெல்டா வகை தொற்று பாதிப்பால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மக்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடுவது பற்றி அந்நாட்டு அரசு ஆலோசித்து வந்தது. அதற்கு இப்போது அமெரிக்கா அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (Food and Drug Administration) மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் மூன்றாவது டோஸுக்கு அவசரப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.