தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டசபையில் முதன்முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின்…

தமிழக சட்டசபையில் முதன்முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். இதையடுத்து தமிழக சட்டசபையில் நேற்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை பட்ஜெட்டில், காகிதமில்லா சட்டசபை என்பதை நடைமுறைப் படுத்தும் வகையில், உறுப்பினர்கள், பட்ஜெட் விவரங்களை கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் நிதி நிலைக்கு என தனி பட்ஜெட், இப்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இந்த வேளாண் பட்ஜெட்டை காலை பத்து மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பொதுபட்ஜெட்டைப் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.